தங்கம் விலை: இன்னும் எவ்வளவு குறையும்?
ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இறக்கம் கண்டிருக்கிறது. இந்த விலை இறக்கத்தை அடுத்து பெரும்பாலான முதலீட்டாளர் கள் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த தங்கத்தை விற்றனர். இதையடுத்து, தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
2011 செப்டம்பர் 5-ல் தங்கம் ஒரு அவுன்ஸ் விலை 1,900.23 டாலராக இருந்தது. அதிலிருந்து இப்போது 40 சதவிகிதத்துக்குமேல் வீழ்ச்சி கண்டிருக்கிறது. கடந்த ஓராண்டில் சுமார் 13% குறைந்துள் ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் 1,154 டாலராக இருக்கிறது.
தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு மூன்று முக்கியக் காரணங்கள் சொல்லப்படுகிறது.
அமெரிக்கப் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி காண ஆரம்பித்திருப்பது, டாலரின் மதிப்பு அதிகரித்து வருவது, சர்வதேச பங்குச் சந்தைகள் சிறப்பாகச் செயல்பட ஆரம்பித் திருப்பது ஆகியவை அந்தக் காரணங்களாக இருக்கின்றன.
நாம் எத்தகைய முதலீட்டில், எந்த நேரத்தில் முதலீடு செய்கிறோம், எப்போது வெளியே வருகிறோம் என்பதுதான் முக்கியம். எனவே, ஏற்ற இறக்கம் கலந்த சந்தையில் இறங்கும்போது வாங்குவதையும், விலை ஏற்றம் காணும்போது லாபத்தை வெளியே எடுப்பதையும் வாடிக்கையாக வைத்துக்கொள்ள வேண்டும். தற்போதைய சூழ்நிலையைப் (விலை இறக்கத்தை) பயன்படுத்தி, அடுத்தச் சுழற்சிக்கு முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கத் தயாராக வேண்டும்.
சர்வதேச அளவில், பெரிய முதலீட்டாளர்கள் (HNIs) சுழற்சிமுறையில் முதலீடுகளைச் செய்து வருவதைப் பார்க்க முடிகிறது.
முன்பு முதலீட்டு நோக்கத்தில் தங்கத்தை வாங்கியவர்கள் இப்போது லாபத்தில் இருப்பதால், அதை விற்று வருகின்றனர். தங்கத்தின் விலை குறைவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம் என்று சொல்லலாம்.
விலை இன்னும் சரியுமா?
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 1,100 டாலர் வரைக்கும் குறைய வாய்ப்புண்டு. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.2,300 வரைக்கும் குறைய வாய்ப்புண்டு.
அதேநேரத்தில், தங்கத்தின் விலை இன்னும் பெரிய அளவில் குறையாது. விலை இன்னும் உயருவதற்கே வாய்ப்புண்டு என்றும் சொல் கிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
1) உற்பத்திச் செலவு!
தங்கத்தின் உற்பத்தி செலவு குறைந்தபட்சம் 1,100 அமெரிக்க டாலராக இருக்கும் நிலையில், மேலும் சரிவு என்பது உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். இதனால், அந்த நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்து விலைச்சரிவை தடுக்க முயலும்.
2) குறைந்த உற்பத்தி!
கடந்த 10 வருடங்களில் தங்கம் உற்பத்தி 2 சதவிகிதத்துக்கும் குறைவாகவே அதிகரித்துள்ளது.
3) அதிகரிக்கும் முதலீடு!
ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளும், தங்கத்தின் மீதான முதலீடு களை மேலும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. வருகிற 20-ம் தேதி சுவிஸ் மத்திய வங்கி எடுக்கக்கூடிய முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் தங்க கையிருப்பை, தற்போதைய 7 சதவிகிதத்தி லிருந்து 20 சதவிகிதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
இது நடைமுறைக்கு வரும்பட்சத்தில் இந்த வங்கி ஆண்டுக்கு 300 டன்கள் என்ற அளவுக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குத் தொடர்ச்சியாகத் தங்கம் வாங்கும் என்று சொல்லப் படுகிறது.
இப்படி வாங்கக்கூடிய தங்கம் அனைத்துமே இடிஎஃப் மூலம் வாங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மொத்த உற்பத்தியில் பாதிக்கு மேலாக சுவிஸ் மத்திய வங்கி வாங்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
4) மீண்டும் தேக்கநிலை!
சென்ற வாரத்தில் அமெரிக்கக் கருவூலம் தொடர்புடைய டீலர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அமெரிக்கா 1937-ம் ஆண்டு சந்தித்த அனுபவத்தை மீண்டும் நினைவுபடுத்துவதுபோல இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தச் சமயத்தில், இதேபோல் பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டு வருகையில், முன்கூட்டியே ஊக்குவிப்புத் திட்டங் களை நிறுத்தியதால், மிக வேகமாக அந்த நாட்டின் பொருளாதாரம் மீண்டும் தேக்கநிலைக்குத் திரும்பியது.
பணவீக்கமானது 2% இலக்கை எட்டாமல் வட்டி விகிதங்களை அவசரப்பட்டு உயர்த்துவது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று இப்போது யோசிக்க வைத்துள்ளது. அமெரிக்காவில் வட்டி உயர்த்தப் பட்டால், பங்குச் சந்தை முதலீடுகள் தங்கத்தின் பக்கம் திரும்பக்கூடும். அப்போது தங்கத்துக்கான தேவை அதிகரித்து விலை உயரக்கூடும்.
கோல்டு இடிஎஃப்!
நம்மில் சிலர் தங்க காசுகளாகவோ, ஆபரணங்களாகவோ தங்கத்தை வாங்கி முதலீடு செய்து வருகின்றனர். ஆனால், கோல்டு இடிஎஃப் முறையில் நீண்ட கால அடிப்படையில் சிறுக சிறுக முதலீடு செய்து வந்தால், அதிக லாபம் பெறலாம்.
கோல்டு இடிஎஃப் ஃபண்டுகளின் விலை தற்போது கவர்ச்சிகரமாக இருக்கிறது. உதாரணமாக, கோல்டு பீஸ் இடிஎஃப் ஒரு யூனிட்டின் விலை ரூ.2,391 (நவம்பர் 3, 2014). ஓராண்டுக்கு முன்பு ஒரு யூனிட்டின் விலை ரூ.2941-ஆக இருந்தது. இதை நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். அந்தவகையில் உங்கள் போர்ட்ஃபோலியோவில் தங்கத்தை 0-15% வரை வைத்துக்கொள்ளலாம்.