Tuesday 22 March 2016

Tamil Traditional Foods

இட்லியின் வரலாறு....! அதிகமாக பகிரவும்
தமிழனுக்கு சாம்பார் இட்லியும் தெரியும், குஷ்பு இட்லியும் தெரியும். ஆனால் அதன் வரலாறு தெரியாது. உளுந்து எனும் அரிய தானிய வகையின் தாயகம் இந்தியா. குறிப்பாக தமிழகத்தின் தஞ்சை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகமாக விளைவிக்கப்பட்டு பிறகு ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலும் அதிகம் விளைவிக்கப்படும் பயறு வகையாக இருக்கிறது.

உழுந்தைப் பற்றிய குறிப்புக்கள் அகநாறு, புறப்பாடல், முத்தொள்ளாயிரம் ஆகிய சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. சங்கத்தமிழ் இலக்கியங்களுக்கு இணையான மூப்பு கொண்ட பிறமொழி இந்திய இலக்கியங்கள் எதுவும் இல்லாத நிலையில், உழுந்தையும் – அரிசியையும் கொண்டு ஈரமா செய்து இட்லியை கண்டுபிடித்த பெருமை தமிழனையே சாரும். உரலில் இடித்த அரிசிமா கொண்டு, அப்பம், பனையோலை, பூவரசு இலைக் கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை ஆகியவற்றை கண்டறிந்த தமிழன், அதன் தொடர்ச்சியாகவே இட்லியைக் கண்டறிந்தான் என்கிறார் தமிழகத்தின் பண்பாட்டு அதிர்வுகளை ஆய்வு செய்துவரும் பேராசிரியர் தோ.பரமசிவன்.

'இட்டரிக' என்று ஏழாம் நூற்றாண்டிலும் 'இட்டு அவி' 12 ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட நிலையில் பின்பு 'இட்டு அவி' என்ற இரட்டைச் சொல் மருவி 'இட்டலி' என்ற ஒரு சொல்லாய் திரிந்து அதன் பின்னர் 'இட்லி' என்று ஆனதாகக் தெளிவாகக் குறிப்பிடுகிறார் அவர். முதலில் உருண்டை வடிவிலான இட்டலிகளே இருந்திருக்க வேண்டும் என்றும், பின்னர் உருண்டை வடிவிலான இட்லிகளின் மேல் பகுதிகள் மென்மையாகவும், நடுப்பகுதி கடினமாகவும் இருக்கக் கண்டு, பிறகு தட்டை வடிவில் அவிக்க தமிழர்கள் கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.

இட்லியின் வரலாறு தமிழர்களின் உணவுப் பண்பாட்டின் ஒரு பகுதியாக இருக்க, இன்று இட்லிக்கு பெயர்பெற்ற ஊராக விளங்குகிறது தமிழகத்தின் மதுரை. மதுரை இட்லியைப் போலவே, செட்டிநாடு இட்லி, தஞ்சாவூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி ஆகியன பிரபலமாக இருக்கின்றன. அதேபோல அரிசி மா இல்லாமல் ரவை மாவில் உளுந்து மா கலந்து செய்யப்படும் ரவை இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி என்று புதிது புதிதாக தமிழன் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தினாலும் அரிசிமாவும் உழுந்து மாவும் கலந்து அவிக்கப்படும் இட்லியுடன் சாம்பார், தேங்காய் சட்னி, பொடி, புதினா சட்னி, வெங்காயச் சட்னி விதவிதமான வகையில் சைடிஸ் உணவுடன் சாப்பிடும் சுவைக்கு பிட்சாவோ, பர்கரோ கூட ஈடாகமுடியாது.

இட்லியில் என்ன இருக்கிறது? இப்படிப்பட்ட தமிழரின் கண்டுபிடிப்பான இட்லியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாவிட்டால் நாம் தமிழராக இருந்து என்ன பயன்? இட்லியின் அடிப்படைப் பொருட்களான அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கல்சியம், பொஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உடலில் செயலாற்றுகின்றன.

மென்மையான எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது இட்லி. 75 கிராம் எடை கொண்ட 4 இட்லிகளோ அல்லது 50 கிராம் எடைகொண்ட 6 இட்லிகள் சாப்பிடுவதால் அமினோ அமிலங்களும் பன்மடங்கு அதிகரிக்கின்றன. திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயற்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன. லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.

இட்லியுடன் அவ்வப்போது நீங்கள் புதினா அல்லது கொத்தமல்லி சட்னி சேர்த்துக் கொண்டால் இதன்மூலம் லைசின் அமிலம் உடலுக்கு கிடைத்துவிடும். என்றாலும் இரவில் இட்லி எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் 200 கிராம் அளவைத் தாண்டாமல், அதாவது நான்கு இட்லிகளுக்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
எத்தனைப்பேருக்கு தொியும் திருநெல்வேலி அல்வா வரலாறு..!! 
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி ஜமீன்தார் புனித யாத்திரையாக வட இந்திய புண்ணியத் தலங்களுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தயாரிக்கப்பட்ட அல்வாவை வாங்கிச்
சாப்பிட்டிருக்கிறார். அந்தச் சுவையில் மயங்கிய அவர் அந்த அல்வா தயாரித்தவரையே திருநெல்வேலிக்கு அழைத்து வந்திருக்கிறார். அவர் மூலம் திருநெல்வேலியில் அல்வா தயாரிப்பு துவங்கி இன்று அல்வா என்றாலே திருநெல்வேலி என்றாகி விட்டது என்று சிலர் சொல்கிறார்கள்..

வட இந்தியாவிலிருந்து வணிகத்திற்காக தமிழகத்தின் தென்பகுதிக்கு வந்த ஒரு குடும்பத்தினர் திருநெல்வேலியில் அவர்கள் ஊரின் அல்வாவைத் தயாரித்திருக்கிறார்கள். தாமிரபரணித் தண்ணீரின் சேர்க்கையால் அந்த அல்வா அவர்களின் ஊரில் செய்த அல்வாவை விட மிகவும் ருசியாக இருந்திருக்கிறது.இந்த சுவையான திண்பண்டத்தை இந்த ஊரிலேயே தயாரித்து விற்பனை செய்தால் என்னவென்று அல்வாக் கடையைத் துவங்கி இருக்கிறார்கள் அன்றிலிருந்து அல்வா திருநெல்வேலியில் ஒன்றாகி விட்டது என மற்றும் சிலர் சொல்கிறார்கள்..

எது எப்படியோ இன்று திருநெல்வேலி என்றாலே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் அல்வா ஞாபகத்திற்கு வந்து விடுகிறது. இந்த ஊரு அல்வாவிற்கு இருக்கும் சுவையே தனிதான். திருநெல்வேலி முழுக்க அல்வாக் கடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் திருநெல்வேலியில் இருக்கும் நெல்லையப்பர் கோவிலின் எதிரே இருக்கும் "இருட்டுக்கடை" அல்வாவிற்குத்தான் முதலிடம்.
சந்திரவிலாஸ் என்கிற கடையும் உண்டு..இங்கு கிடைக்கும் அல்வாவும் மிகத் தரமானதுதான் இங்கு அறுபதுகளிலேயே .உங்களது உணவினை ஃபோன் மூலமாக ஆர்டர் செய்து கொள்ளும் வசதி இருந்தது..

இதற்கு அடுத்தபடியாக திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகிலுள்ள "சாந்தி ஸ்வீட்ஸ்" கடையின் அல்வாவிற்கு இரண்டாமிடம் (இந்த சாந்தி ஸ்வீட்ஸ் என்கிற பெயரில் திருநெல்வேலி சந்திப்பு மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இரண்டாம்தரக் கடைகள் நிறைய இருக்கிறது. ஒரு பிரபலமான கடைக்கு இத்தனை போலியான கடைகளா? என்று வியக்க வைக்கும் அளவிற்கு அனைத்துக் கடைகளிலும் சாந்தி ஸ்வீட்ஸ் பெயர்ப்பலகைகள்...)

அடுத்த இடத்தில் "லெட்சுமி விலாஸ்" கடை அல்வா இருக்கிறது. இது தவிர பல லாலாக் கடைகள் (ஸ்வீட் மற்றும் மிக்சர் போன்றவை விற்பனை செய்யும் கடைகளை லாலாக் கடை என்றுதான் நெல்லை பகுதிகளில் அழைக்கிறார்கள்.) சுவையான அல்வாவைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்த இருட்டுக் கடையில் அல்வா மாலை நேரத்தில் மட்டும் அதாவது மாலை ஆறு மணிக்குத் துவங்கி இரவு பத்து மணி வரை விற்பனை செய்யப்படுகிறது. 82 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணசிங் மற்றும் அவரது மகன் பிஜீலிசிங் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்த அல்வாக் கடையில் மாலை நேரத்தில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் அல்வா வியாபாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதனால் இந்த அல்வாக் கடையை திருநெல்வேலி மக்கள் இருட்டுக் கடை என்று அழைத்தனர்.

கடையைத் துவங்கிய இருவரது மரணத்திற்குப் பிறகு ஹரிசிங் என்பவர் இந்தக் கடையை நடத்தி வருகிறார். இப்போதும் இந்த இருட்டுக் கடையில் தங்களது பழைய நிலையிலேயே அதே மனோபாவத்தில் (செண்டிமெண்ட்) அதாவது வெறும் 40 வாட்ஸ் மின் விளக்கு வெளிச்சத்திலேயே கடையில் எவ்விதமான ஆடம்பரமும் செய்யாமல் அல்வா வியாபாரம் நடப்பதால் இந்தக் கடைக்கு இருட்டுக் கடை என்கிற பெயரே நிலையான பெயராகி விட்டது.

இங்கு அல்வாவை 100 கிராம், 200 கிராம் என்கிற அளவுகளில் சுடச்சுட இலையில் வைத்து விற்பனை செய்கிறார்கள். இவ்வூர் மக்கள் இதை விரும்பி வாங்கிச் சாப்பிடுகிறார்கள். கிலோக் கணக்கிலும் வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர்.

திருநெல்வேலியிலும் இதைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருப்பவர்கள், வெளியூர்களில் இருக்கும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது இந்த இருட்டுக் கடையில்தான் அல்வாவை வாங்கிச் செல்கின்றனர். வெளியூரிலிருந்து வருபவர்கள் திருநெல்வேலிக்கு வரும் போது இருட்டுக் கடை குறித்து தெரியாததாலும், இந்தக் கடை அல்வாவிற்காக இரவு வரை காத்துக் கிடக்க விரும்பாமலும் வேறு கடைகளில் வாங்கிச் செல்கின்றனர். இப்படி வாங்கிச் செல்லும் கடைகளில் திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையத்தின் அருகிலிருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ், லெட்சுமி விலாஸ் கடைகளில் இருக்கும் அல்வாக்கள் சுவையாக இருக்கிறது. மற்ற லாலாக் கடைகளிலும் அல்வா ஓரளவு சுவையாக கிடைக்கிறது. தரம் குறைந்த அல்வாவும் பல போலிக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

சுத்தமான சம்பாக் கோதுமையில் நெய், சர்க்கரை, பால் மட்டும் சேர்த்துச் செய்யப்படும் அல்வா மிகச் சுவையாக கிடைக்கிறது. ஆனால் பல போலியான அல்வா கடைகளில் தரமில்லாத கோதுமையில் அல்லது ஜவ்வரிசி மற்றும் பிற மாவுப் பொருட்களையும் கலந்து தயாரிக்கப் படுகின்றன. இது போன்ற கலப்புப் பொருள்களால் தயாரிக்கப்படும் அல்வா சுவையாக இருப்பதில்லை...!!!
பொரித்த ரசம் 
ஒரு எளிய மற்றும் சுவையான தென்னிந்திய பிராமண உணவாகும். வேகவைத்த சாதம் மற்றும் சைட் டிஷ் ஆகியவற்றுடன் பரிமாறவும்.

தேவையான பொருட்கள்

மிளகு – பத்து
சீரகம் – இரண்டு டீஸ்பூன்
பூண்டு – இரண்டு பல்
கடுகு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைகேற்ப
நெய் – இரண்டு டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
கரிவேபில்லை – சிறிதளவு

செய்முறை

பூண்டை தோலுரித்து நசுக்கிக் கொள்ளவும்.

கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரன்டாக உடைத்து போட்டு பொரிக்கவும்.

பின், அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

இன்னொரு கடாயில் காய்ந்ததும் கடுகு, கரிவேபில்லை, பெருங்காயம் சேர்த்து தாளித்து அதில் கொட்டி இறக்கவும்.
ஈஸியான... ரசகுல்லா
குலாப் ஜாமூனுக்கு அடுத்த படியாக பலரும் விரும்பி சாப்பிடுவது ரசகுல்லா தான். இந்த ரசகுல்லா செய்வதற்கு பலருக்கும் தெரியாது. மேலும் இதனை எப்படி செய்வதென்று பலரும் இணையதளத்தில் தேடியிருப்பார்கள்.

தேவையான பொருட்கள்:

பால் - 1/2 லிட்டர்
எலுமிச்சை சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 மற்றும் 3/4 கப்
ஐஸ் கட்டிகள் - 4-5
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
பிஸ்தா - 3-4

செய்முறை:

முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பாலானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பால் நன்கு திரியும் வரை தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
பாலில் இருந்து தண்ணீர் முற்றிலும் பிரிந்ததும், அடுப்பை அணைத்து, பின் பாலில் ஐஸ் கட்டிகளை சேர்த்து, ஐஸ் கட்டிகளை உருக வைக்கவும்.
ஐஸ் கட்டிகள் முற்றிலும் உருகியதும், அதனை மஸ்லின் துணியில் ஊற்றி அதில் உள்ள நீரை முற்றிலும் வடிகட்டி, ஓடும் நீரில் மஸ்லின் துணியில் உள்ள திரிந்த பாலை எலுமிச்சை வாசனை முற்றிலும் போகும் வரை நன்கு கழுவ வேண்டும்.
பின் அதில் உள்ள நீரை வடித்து, 30 நிமிடம் தனியாக வைக்க வேண்டும். பின்பு மஸ்லின் துணியில் உள்ள அந்த திரிந்த பாலை ஒரு தட்டில் போட்டு, அதனை பிசைய வேண்டும்.
பிறகு அதனை சிறு உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கொதிக்க விட வேண்டும்.
சர்க்கரை நீரானது ஓரளவு கெட்டியான பின் அதில் உருட்டி வைத்துள்ளதை போட்டு, குறைவான தீயில் 3 நிமிடம் வேக வைக்கவும்.
பின் மிதமான தீயில் 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். முக்கியமாக இந்நேரத்தில் 3 நிமிடத்திற்கு ஒருமுறை மூடியை திறந்து பார்க்க வேண்டும்.
இறுதியில் அதனை இறக்கி, குளிர வைத்து, அதன் மேல் பிஸ்தாவை தூவினால், ரசகுல்லா ரெடி!!!
சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்
மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, இன்று சற்று வித்தியாசமாக பிஸ்கட் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். அதிலும் சாக்லேட் ப்ளேவர் கொண்ட பிஸ்கட்டைப் பயன்படுத்தி மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.
இது குழந்தைகளுக்கு பிடித்தவாறும், வித்தியாசமான சுவையிலும் இருக்கும். சரி, இப்போது சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக் எப்படி செய்வதென்று பார்ப்போமா!

தேவையான பொருட்கள்:

குளிர்ச்சியான பால் - 2 கப்
சாக்லேட் க்ரீம் பிஸ்கட் - 1-2
க்ரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட் - 1
சாக்லேட் சாஸ் - 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மிக்ஸியில் பாலை ஊற்றி, அத்துடன் க்ரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் க்ரீம் உள்ள சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ளவும்.
பின்பு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடல் சாக்லேட் சாஸ் சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால், சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக் ரெடி!!


பாசிப்பருப்பு கடையல்
பருப்பு வகைகளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் பருப்புக்களில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசியமான சத்துக்கள் ஏராளமாக உள்ளன. அதிலும் பாசிப்பருப்பை கடைந்து சாதத்துடன் சேர்த்து நெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும்.
பேச்சுலர்களுக்கு இந்த சமையல் மிகவும் எளிமையாக இருக்கும். சரி, இப்போது அந்த பாசிப்பருப்பு கடையலை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பாசிப் பருப்பு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை நன்கு நீரில் கழுவி, பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை மிதமான நிலையில் வைத்து 15-20 நிமிடம் நன்கு பருப்பை வேக வைக்க வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும்.
பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அத்துடன் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி இறக்கினால், பாசிப்பருப்பு கடையல் ரெடி!!!
பழைய சாதம் –“இவ்வ்வளவு” விஷயமா?
காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள்? அமெரிக்க ஊட்டசத்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

காலை உணவுக்கு பழையசோறு (கஞ்சி) சாப்பிடுவது உடல்ஆரோக்கியத்திற்கு பலவகைகளிலும் நல்லது என்பதுஅமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இரவு சாப்பாடு முடிந்துஎஞ்சியுள்ள சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்துவிடுவார்கள்.

மறுநாள் காலையில் சற்றுபுளித்த சுவையுடன் நுரைதள்ளிய நிலையில் பழைய சோறுதயாராகிவிடும். பழைய சோறுதண்ணீரில் சிறிது உப்புபோட்டுக் குடிப்பதை வீட்டில்உள்ள பெரியவர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள். உடல்சூட்டை தணித்துவிடும் ஆற்றல் இந்த தண்ணீருக்கு உண்டு.கால மாற்றம், நாகரீகம்ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் பழைய சோறு இருந்த இடத்தை இப்போது இட்லி,தோசை, பூரி, சப்பாத்தி, நூடுல்ஸ்போன்ற உணவுகள்ஆக்கிரமித்துவிட்டன.கிட்டத்தட்ட அனைத்துவீடுகளிலும் இப்போது எல்லாம் இரவு கூட டிபன்தான். எனவே,மறுநாள் காலையில் பழையசோறு சாப்பிடுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில், பழையசோறு என்றும், கஞ்சி என்றும் நாமெல்லாம் உதாசீதனப்படுத்திய அந்த மகத்தான உணவின்மகத்துவத்தையும், பல்வேறுவிதமான பயன்பாடுகளையும்அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு மூலம்கண்டுபிடித்துள்ளனர்.

தென்னிந்தியர்கள் காலை உணவாக பயன்படுத்தும்பழைய சோற்றில் உடல்ஆரோக்கியத்திற்கு தேவையான இவ்வளவு சத்துகள்அடங்கி உள்ளனவா? என்றுவியந்து போனார்கள். அவர்களின் ஆய்வில் தெரிய வந்தவிவரங்கள் வருமாறு:பழைய சோறு, காலைஉணவுக்கு மிகவும் பொருத்தமான உணவு ஆகும்.

மற்றஉணவு பதார்த்தங்களில் இல்லாத வகையில் பழையசோற்றில் அரிய வைட்டமின்களான பி6, பி12 ஆகியவைமிகுதியாக காணப்படுகிறது.பழைய சோற்றில் உருவாகும்கோடிக்கணக்கான நல்லதன்மை கொண்ட பாக்டீரியாக்கள் உணவு செரிமானத்திற்குபெரிதும் உதவும். அதில் நோய்எதிர்ப்பு மற்றும் நோய்தடுப்புக்கான காரணீகள்ஏராளமாக உள்ளன.கஞ்சி சாப்பிடுவதால்சிறுகுடலில் உருவாகும்பாக்டீரியாக்கள் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பதுடன்அவற்றை நோய் உண்டாக்கும்கிருமி களை எதிர்க்கும்வகையில் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கின்றன.காலை உணவாக சாப்பிடும்பழைய கஞ்சி எளிதில் ஜீரணமாகிவிடும். அது வயது முதிர்ந்ததோற்றத்தையும், எலும்புசம்பந்தப்பட்ட நோய்களையும் நீக்கும். ஜீரணம் தொடர்பானஎந்த பிரச்சினையும் வராது. சூடுதணிந்து உடம்பு குளிர்ச்சி யாக இருக்கும். பழைய சோறு நார்ச்சத்து கொண்டதாக இருப்பதால் மலச்சிக்கல்பறந்துவிடும். மந்தநிலை போய்உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் பழையசோறுக்கு உண்டு. உடலில்சோர்வே ஏற்படாது.

பழைய சோறு சாப்பிட்டால் அன்றைய நாள்முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். சோர்வு அண்டாது.அனைத்து விதமான ஒவ்வாமைகளும், தோல் சம்பந்தப்பட்டநோய்களும் காணாமல்போய்விடும். எந்தவித அல்சரும் நெருங்காது. உடல் இளமையாகவும், தோற்றப்பொலிவுடனும் இருக்கும்.மேற்கண்ட தகவல்களைஅமெரிக்க விஞ்ஞானிகள்தங்கள் ஆய்வில் கண்டறிந் துள்ளனர். மண்பானையில்தண்ணீர் ஊற்றி செய்யப்படும்பழைய சோறு இன்னும் அதிகசுவையுடன் மணம் கொண்டதாக இருக்கும். இன்றும்கிராமப்புறங்களில் கல் சட்டிஎன்று சொல்லப்படும் மண்பானையில்தான் பழைய சோறுபோட்டுவைப்பார்கள்.பல வீடுகளில் தலைமுறைதலைமுறையாக பயன்படுத்தப்பட்டு வரும் கல்சட்டிகள்கூட இருக்கத்தான் செய்கின்றன.

பழைய சோறுக்கு சம்பாஅரிசிதான் மிகவும் ஏற்றதுஆகும். காரணம், அதில்ஏராளமான ஊட்டச்சத்துகளும்தாதுபொருட்களும் அடங்கிஉள்ளன.எப்போதுமே நம்மவர்கள்சொல்வதை நம்பாமல் வெளி நாட்டினர் கூறுவதை அப்படியேவேதவாக்காக கருதுவது நமதுவழக்கம். இப்போது வெளிநாட்டுவிஞ்ஞானிகளே பழையசோற்றின் மகத்து வத்தைசொல்லிவிட்டார்கள்.

இனிமேலும் என்ன யோசனை?

இன்றைய நாகரீக உணவுகளுக்கு விடை கொடுத்துவிட்டு முன்பு இருந்ததைப் போலகாலை உணவுக்கு பழைய சோறு சாப்பிடுவோம். உடல் நலனைபாதுகாப்போம்.

--------------------------------------------------------------------------------

பழைய சோறு- அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவா க பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்போது கிராமங்களில்கூட காண முடிவதி ல்லை. (ஆனால் இன்று நட்சத்திர ஹோட்டல்களில் மெனு கார்டில் முதலிடம் பழைய சோறு காரணம் கீழே முழுவதும் படிங்க..)

பழைய சோறு- அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழையசோறு சாப்பிடுவது வழக்க ம். அந்த வழக்கம் தற்போது கிராம ங்களில்கூட காண முடிவதில்லை. நாம் சிறுவயதில் சாப்பிட்டி ருப்போம்.

இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப் படுகிறது. பிச்சைக்காரன்கூட வாங்க மாட்டேன் என்கிறான். அப்படித்தான் எங்கள் வீட்டில் ஒருநாள் மதிய உணவை முடித்துவிட்டு மீதம் இருந்த சாதத்திற்க்கு தண்ணிர் உற்றி வைத்துவிட்டோம், சிறி து நேரத்தில் ஒருவர் தனக்கு பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடுங்கள் என கேட்க எங்க அம்மா அவரிடம் இப்போ தான் தண் ணிர் ஊற்றினேன் குழம்பு ஊற்றி கொண் டு வரவா அல்லது தண்ணிரோடு சாப்பிடுகிறீர்களா என கேட்க தண்ணி ஊத்தியாச்சா நான் பழைய சோறு சாப்பிட மாட்டேன் எனக்கு வேண்டாம் எனக்கூற, இப் போதான் ஊற்றினேன் பழையசோறு இல்ல என எடுத்து கூறியும் அவர் எனக்கு வேண்டாம் என நடையை கட்டிவிட்டார்.

அப்போதே அப்படி என்றால் இக்காலத்தில் சொல்ல வே வேண்டாம். பழைய சோறு என்றாலே காத தூரம் ஓடுகிறோம். ஆனால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கி றதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருகி றதாம். உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகி விடும்.

காலையில் கழிவறையில் மல்லு கட்ட வேண்டாம்.
இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமி தமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைகிறதாம். காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது பன்றி காய்ச்சல் உட்பட. காலை உணவாக பழைய சாதத்தை உண்டால் உடல் லேசா கவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் . இரவிலே தன்னிர் ஊற்றி வைப் பதால் லட்சக்கணக் கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன் றவற்றை குணப்படுதும். அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் இல்லாமல் காலையில் ஃபிரியா போலாம். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறந்துவிட்டதாக அமெரிக்காவில் வசிக் கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் கூறுகி றார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகி விடுகிறது.

அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குண்மாகி விடும். எல்லாவற்றிர்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்ப தால் எந்த நோயும் வராம்ல் உடல் ஆரோக்கியமாகவும் இளமை யாகவும் இருக்கும். அதனாலதான் நம்ம ஆளுங்க ஒரு சட்டி பழைய சாதம் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்யமுடிந்திருகிறது போலும். காலையில் சாண்ட்விச், பீட்ஸா, பர்கர் என கழித்து திரியும் தமிழ் மக்களே இன்றிலிருந்து பழைய சோறு சாப்பிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம். அப்புறம் பழைய

சாதம் செய்ய தெரியுமா?
(என்ன கொடுமை சார் இது எதுக்கெல்லாம் கிளாஸ் எடுக்க வேண்டியாத இருக்கு)

பொங்குன சோத்துல தண்னிய ஊத்திட்டு அடுத்த நாள்
காலைல திறந்து பாருங்க கமகம என பழைய சோறு தயார். இதற்கு கை குத்தல் அரிசி சிறந்தது. நம்ம வீட்டல் போய் கை குத்தல் அரிசியில் சோறு பொங்க சொன்னால் நம்க்கு தான் குத்து கிடைக்கும் என அஞ்சுபவர்கள் ஒரு ரூபாய் அரிசிகூட உபயோக்கலாம். சூடான சாததில் தண்னிர் ஊற்ற கூடாது. ஆறிய பின்பு மண்சட்டியில் போட்டு தண்னிர் ஊற்றி மறு நாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்கா யத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்று இருக்கும். மதியம் வரை பசிக்காதாம்.
சிறுதானிய போண்டா தினை - சோளம்
சிறுதானியமான தினை, சோளம் இவற்றில் தயாரிக்கபடும் போண்டா மிகவும் சுவைமிகுந்தது.

கிராமப்புறங்களில் அதிகபடியாக சிறுதானியங்களை பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை நகரங்களிலும் உணர்ந்து.

தேவையான பொருட்கள்: 

தினை மாவு - அரை கப், 
சோள மாவு - அரை கப். 
உருளைக்கிழங்கு - 3, 
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது), 
இஞ்சி - அரை தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி - தேவையான அளவு, 
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது), மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி, 
கறிவேப்பிலை - ஒரு கீற்று, 
கடுகு - சிறிதளவு, 
உளுத்தம் பருப்பு -1/2 தேக்கண்டி, 
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி, 
உப்பு, சமையல் எண்ணெய் - தேவையான அளவு.

தயார் நிலையில் வைத்து கொள்ளவேண்டியவை:

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். 

வாணலில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சத்தூள், கொத்தமல்லி போட்டு நன்றாகக் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். 

செய்முறை:

தினை மாவு மற்றும் சோள மாவு இரண்டையும் சிறிது உப்பு, மிளகாய்த்தூள், ஆப்பசோடா இவற்றுடன் நீர் கலந்து பஜ்ஜி மாவு பதத்திற்கு 
கரைத்து வைத்து கொள்ளவும்.

அடுப்பில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் உருளைக்கிழங்கு மசாலா உருண்டைகளை, தினை - சோளமாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு சிவக்கப் பொரித்து எடுக்கவும்.

சுவை மிகுந்த சூப்பரான தினை - சோளம் சிறுதானிய போண்டா தயாராகிவிட்டது.

இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்திடலாம்.
தேங்காய் சாதம்
தினமும் பிள்ளைகள் டிபன் பாக்ஸ்சுக்கு என்ன சாப்பாடு தயார் செய்வது என்பது இல்லத்தரசிகளுக்கு ஒரு பிரச்சனையாகவே இருக்கிறது.

தேவையான பொருட்கள்: 

அரிசி - 1/2 கிலோ, 
உளுத்தம் பருப்பு - 50 கிராம், 
கடுகு - 10 கிராம், 
பச்சை மிளகாய் (அல்லது காய்ந்த மிளகாய்) - 4, தேங்காய் - 1, 
கடலைப்பருப்பு - 10 கிராம், 
முந்திரிப்பருப்பு - 20 கிராம், 
எண்ணெய் - தேவையான அளவு, 
கறிவேப்பிலை - தேவையான அளவு.

தயார் செய்து கொள்ள வேண்டியவை:

அரிசியை பக்குவமாக அதாவது உதிரி சாதமாக வடித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறுது நெய் விடு முந்திரியை வறுத்து எடுத்து கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். 

செய்முறை:

எண்ணெய்யை வாணலியில் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு தாளிக்கவும். பின்னர் துருவிய தேங்காயை பொட்டு வதக்கவும். பிறகு வடித்து வைத்திருக்கும் சாதம், இவற்றுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும் சூடாக பரிமாறலாம்.

மேலே வறுத்த முந்திரியை தூவி, கொஞ்சம் கொத்தமல்லி இலைகளை சேர்க்கலாம். பார்க்க அழகாகவும், சுவை சூப்பராகவும் இருக்கும்.
ஜவ்வரிசி பக்கோடா
ஜவ்வரிசியை வைத்து என்ன பண்ணலாம் என்று யோசிப்பவர்களுக்கு ஒரு புதிய டிஷ்.

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 1 கப்
ரவை - 1 கப்
பச்சரிசி மாவு - 1 கப்
தயிர் - 2 கப்
வெங்காயம் - 1/2 கப்
முந்திரிப்பருப்பு - 1/4 கப்
இஞ்சி - சிறிதளவு 
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தயிரில் ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

ரவை, மாவு சேர்த்து நன்றாக பிசையவும். நறுக்கிய மிளகாய், வெங்காயம், முந்திரி பருப்பு போட்டு எண்ணெயில் பக்கடா போல் உதிர்த்துப் போடவும். ஜவ்வரிசியை திரித்தும் விடலாம்.
செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி
உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்தும் பிடிக்குமா? அதில் செட்டிநாடு உணவுகளில் ஒன்றான வெண்டைக்காய் மண்டி பற்றி தெரியுமா? இல்லையெனில் இங்கு அந்த செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி சமையலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வெண்டைக்காய் மண்டி சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். இதன் ஸ்டைல் அரிசி ஊற வைத்த நீரைக் கொண்டு தயாரிப்பது தான். சரி, இப்போது அந்த வெண்டைக்காய் மண்டி ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 1 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 8 பல் (நறுக்கியது)
தக்காளி - 1
புளி - 1 எலுமிச்சை அளவு
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
ஊற வைத்து கழுவிய அரிசி நீர் - சிறிது
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, பெருங்காயத் தூளையும் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பின்னர் அத்துடன் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் வெண்டைக்காயை சேர்த்து, அதில் உள்ள பிசுபிசுப்புத்தன்மை போகும் வரை வதக்க வேண்டும். அதற்குள் ஊற வைத்து கழுவிய அரிசி நீரில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வாணலியில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, வெண்டைக்காய் பாதியாக வெந்ததும் அத்துடன் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், வெண்டைக்காய் மண்டி ரெடி!!!
செட்டிநாடு கோவக்காய் மசாலா 

ரோடி, அரிசி உணவுகள் மற்றும் சப்பாத்திக்கான ஒரு ருசியான மற்றும் எளிய சைட் டிஷ்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – நான்கு தேகரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
இடித்த பூண்டு – நான்கு பல்
பெருங்காயம் – சிறிதளவு
கோவக்காய் – ஒரு கப் (வட்டமாக நறுக்கியது)

பவுடர் செய்ய:


கடலை பருப்பு – மூன்று டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – மூன்று டீஸ்பூன்
சீரகம் – இரண்டு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – நான்கு

செய்முறை

கடாயை சூடு செய்து கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆறியதும் பவுடர் செய்து கொள்ளவும்.

பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, இடித்த பூண்டு, பெருங்காயம், கோவக்காய் சேர்த்து சிம்மில் வைத்து நன்றாக ஐந்து நிமிடம் வதக்கவும்.

பின், தேவையான அளவு அரைத்த பவுடர் சேர்த்து கிளறி மூன்று நிமிடம் கழித்து இறக்கவும்.
வெஜிடேபிள் போளி 
ஒரு எளிய மற்றும் ஆரோக்கியமான காய்கறி போளி.

தேவையான பொருட்கள்

கேரட் – கால் கப் (துருவியது)
பீட்ரூட் – கால் கப் (துருவியது)
பூசனிக்காய் – கால் கப் (துருவியது)
நெய் – தேவையான அளவு
வெல்ல பாகு – கால் கப்
சப்பாத்தி மாவு – ஒரு சிறு உருண்டை (பிசைந்தது)

செய்முறை

கடாயில் நெய் ஒரு டீஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் கேரட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும்.

அதே போல், கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும் பீட்ரூட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும்.

பின், அதே போல், கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும் பூசனிக்காய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும்.

பிறகு, ஒரு கிண்ணத்தில் வதக்கிய, கேரட், பீட்ரூட், புசனிக்காய், வெல்ல பாகு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பிறகு, சப்பாத்தி மாவு பயன்படுத்தி, சின்ன சப்பாத்தி போல் திரட்டி வைத்து கொள்ளவும்.

ஒரு சப்பாத்தியின் மேல் காய்கறி கலவையை வைத்து பரப்பி, அதன் மேல் இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரத்தில் நன்றாக அழுத்தி தவாவில் போட்டு நெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.
ஓட்ஸ் பகலாபாத்
ஓட்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டாலே எனர்ஜியாக இருக்கிறது. ஆரோக்கிய உணவுகளின் பட்டியலில் உன்னதமான இடத்தைப் பிடித்து மக்கள் மனதிலும் சீக்ரெட் ஆஃப் எனர்ஜியாக நிற்கிறது. அதற்குக் காரணமே ஓட்ஸால் செய்யப்படும் உணவுகள் சத்தாகவும் சுவையாகவும் இருப்பதுதான். அந்த வகையில் ஓட்ஸ் பகலாபாத்தும் அதீத சுவையுள்ள ஒரு ரெசிபி என்றால் மிகையல்ல!

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 100 கிராம் 
தயிர் - 100 கிராம் 
உப்பு - தேவையான அளவு 
கடுகு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - 5 
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் 
இஞ்சி - 1/2 கிராம் 
பச்சை மிளகாய் - 2 
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கிய பிறகு இஞ்சியையும் பெருங்காயத்தூளையும் மிக்ஸ் பண்ணிக் கொள்ள வேண்டும்.

* இதில் தயிரைக் கலந்து உப்பையும் மிக்ஸ் பண்ணிவிட வேண்டும்.

* ஐந்து நிமிடம் கழித்து ஓட்ஸை மிக்ஸ் பண்ணிவிட்டால் ஓட்ஸ் பகாலாபாத் ரெடி